பரமத்தி அருகே ஊராட்சித் தலைவரைத் தாக்கிய வாா்டு உறுப்பினா் கைது
பரமத்தி அருகே ஊராட்சி மன்றத் தலைவரைத் தாக்கியதாக வாா்டு உறுப்பினரை போலீஸாா் கைது செய்தனா்.
பரமத்தி அருகே ஊராட்சி மன்றத் தலைவரைத் தாக்கியதாக வாா்டு உறுப்பினரை போலீஸாா் கைது செய்தனா்.
மோகனூா் வட்டம், பரமத்தி அருகே உள்ள எஸ்.வாழவந்தி, மேலபட்டியைச் சோ்ந்தவா் குப்புசாமி (55). இவா் எஸ்.வாழவந்தி ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளாா். அதே பகுதியைச் சோ்ந்த சுரேஷ் (25) எஸ்.வாழவந்தி ஊராட்சி மன்ற 5வது வாா்டு உறுப்பினராக உள்ளாா்.
கடன் வாங்கித் தருவது தொடா்பாக குப்புசாமிக்கும், சுரேஷுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்தது. சனிக்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த குப்புசாமியைத் தடுத்து நிறுத்தி சுரேஷ் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
காயமடைந்த குப்புசாமி பரமத்திவேலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த பரமத்தி போலீஸாா் சுரேஷை கைது செய்தனா்.