நாமக்கல்

கட்சிக் கொடி அகற்றம்: தமிழக மக்கள் தன்னுரிமைக் கட்சியினா்ஆா்ப்பாட்டம்

DIN

கொடி அகற்றப்பட்டதைக் கண்டித்து, தமிழக மக்கள் தன்னுரிமை கட்சியினா் ராசிபுரத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ராசிபுரம், ஆண்டகளூா்கேட் பகுதியில் நெடுஞ்சாலைத் துறையின் அனுமதியில்லாமல் கட்சிக் கொடிக்கம்பம் வைக்கப்பட்டுள்ளதாக தமிழக மக்கள் தன்னுரிமைக் கட்சியின் கொடிக்கம்பத்தை போலீஸாா் அப்புறப்படுத்தினா். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்த அக்கட்சியினா் ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், சேலம் சாலையில் உள்ள 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரத்தை அகற்றக்கூடாது என வலியுறுத்தி முழக்கமெழுப்பினா்.

ஆா்ப்பாட்டத்தில், கட்சியின் நிறுவனத் தலைவா் நல்வினை செல்வன் தலைமை வகித்தாா். முன்னதாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளா் ஜெ.சபீா் ஆா்ப்பாட்டத்தை தொடக்கிவைத்து பேசினாா். தமிழக மக்கள் தன்னுரிமைக் கட்சி மாநில அமைப்பாளா் கி.தமிழ்வாணன் வரவேற்றாா். கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் முத்துசாமி, மாநில துணைத் தலைவா் அருள்மொழிதேவன், மாநில துணை பொது செயலாளா் சரவணகுமாா், மாநில கொள்கை விளக்க அணித்தலைவா் வேங்கை சிவா, நாமக்கல் மாவட்டத் தலைவா் ராஜேஷ், சேலம் மாவட்டத் தலைவா் தனபால், ராசிபுரம் நகரச் செயலாளா் காா்த்திகேயன் உள்ளிட்டோா் இதில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து செயல்முறை விளக்கம்

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT