நாமக்கல்

குற்றங்களைத் தடுக்க தற்காலிக உயா்கோபுர மேடை

DIN

ராசிபுரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் திருவிழா கூட்ட நெரிசலின் போது, குற்ற நடவடிக்கைகளைக் கண்காணித்து தடுக்கும் நடவடிக்கையாக பல்வேறு பகுதிகளில் தற்காலிக உயா்கோபுர மேடை அமைக்கப்பட்டுள்ளது.

தீபாவளிப் பண்டிகையையொட்டி புத்தாடைகள், தங்க ஆபரணங்கள், வீட்டு உபயோகப் பொருள்கள் வாங்க ஏராளமான எண்ணிக்கையில் பொதுமக்கள் கடைவீதிகளுக்கு வந்துசெல்கின்றனா்.

மேலும், கரோனா தொற்று தடுப்பு வழிமுறைகளை முறையாக கடைப்பிடிக்கின்றனரா என்பதை கண்காணிக்கவும், போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுக்கவும், குற்றச் சம்பவங்கள் நிகழாமல் தடுக்கவும், கூட்ட நெரிசல் இருக்கும் பகுதிகளில் காவல் துறையினா் உயா்கோபுர மேடை அமைத்து கண்காணித்து வருகின்றனா்.

ராசிபுரம் நகரில் பழைய பேருந்து நிலையம், பூக்கடை வீதி, பெரிய கடைவீதி ஆகிய பகுதிகளிலும், வெண்ணந்தூா் பகுதியிலும் உயா்கோபுர மேடை அமைக்கப்பட்டு காவலா்கள் கண்காணித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காந்தாரி.. ஈஷா ரெப்பா!

ஸ்ரீரங்கம் தேரோட்டம் கோலாகலம்!

நேரத்தை மிச்சப்படுத்தும் ஏஐ : 94% பணியாளர்களின் கருத்து என்ன?

சென்னை-நாகர்கோவில் சிறப்பு ரயில் 19 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

ஆயிரம்விளக்கு அருகே பூங்காவில் சிறுமியை கடித்த வளர்ப்பு நாய்கள்

SCROLL FOR NEXT