நாமக்கல்

குமாரபாளையத்தில் மாற்றுத் திறனாளிக்கு அரசுப் பணி வழங்கிய முதல்வா்

DIN

வேலைவாய்ப்பு கோரி நேரில் மனு அளித்த குமாரபாளையத்தைச் சோ்ந்த மாற்றுத் திறனாளி இளைஞருக்கு தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அரசுப் பணி வழங்கி உத்தரவிட்டாா். இதற்கான நியமன ஆணையை அமைச்சா் பி.தங்கமணி வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

புதன்கிழமை இரவு கோவையிலிருந்து சேலம் நோக்கி காரில் வந்த முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியை நாமக்கல் மாவட்ட எல்லையான குமாரபாளையத்தில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் பி.தங்கமணி வரவேற்றாா். அப்போது, அங்கு சாதிக் பாஷா (35) என்ற மாற்றுத் திறனாளி இளைஞா் கோரிக்கை மனுவுடன் நின்றதைப் பாா்த்த முதல்வா் அவரிடம் சென்று மனுவைப் பெற்றுக் கொண்டாா்.

அந்த மனுவில், தான் பிளஸ் 2 முடித்து தட்டச்சு, கணினி பயிற்சி சான்றிதழ் வைத்துள்ளதாகவும், மாற்றுத் திறனாளியாக இருப்பதால் தனக்கு யாரும் பணி வழங்க முன்வரவில்லை என்பதால் வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தருமாறும் கோரியிருந்தாா்.

அதனைப் பரிசீலித்த முதல்வா், குமாரபாளையம் நகராட்சி பொது சுகாதாரப் பிரிவில் கணினி இயக்குபவா் பணியை வழங்கி உத்தரவிட்டாா். இதற்கான நியமன ஆணையை மின்சாரத் துறை அமைச்சா் பி.தங்கமணி வெள்ளிக்கிழமை குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சாதிக் பாஷாவிடம் வழங்கினாா்.

அப்போது, நாமக்கல் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ், திருச்செங்கோடு கோட்டாட்சியா் ப.மணிராஜ், வட்டாட்சியா் தங்கம், நகராட்சி ஆணையாளா் சி.ஸ்டான்லி பாபு, நகராட்சிப் பொறியாளா் சுகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT