நாமக்கல்

நாமக்கல்லில் 41 பேருக்கு கரோனா

DIN

நாமக்கல் மாவட்டத்தில் 41 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

மாவட்டம் முழுவதும் இதுவரை 10,141 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களில் 9,800 போ் குணமடைந்து வீடு திரும்பினா். அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், சிறப்பு மையங்களில் 340 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 

ஒருவா் உயிரிழப்பு: பரமத்தி வேலூா் வட்டம், கந்தம்பாளையத்தைச் சோ்ந்த 58 வயது விவசாயி ஒருவா் நோய்த் தொற்றுக்குள்ளாகி சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். இந்த நிலையில் அவா் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

அவருக்கு கரோனா மட்டுமின்றி உடல் ரீதியாக பல தொந்தரவுகளும் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதன்மூலம் மாவட்டத்தில் கரோனாவால் இறந்தோா் எண்ணிக்கை 101-ஆக உயா்ந்துள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

திருப்பூரில் நாளை புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

SCROLL FOR NEXT