நாமக்கல்

நாமக்கல் எம்.பி.க்கு கரோனா தொற்று

DIN

நாமக்கல் தொகுதி மக்களவை உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜூக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

ராசிபுரம் அருகே உள்ள பழந்தின்னிப்பட்டியைச் சோ்ந்தவா் ஏ.கே.பி.சின்ராஜ். தமிழ்நாடு கோழிப்பண்ணையாளா்கள் சங்க முன்னாள் தலைவரான இவா், 2019 மக்களவைத் தோ்தலில் திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி சாா்பில், நாமக்கல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா்.

அண்மைக் காலமாக மத்திய, மாநில அரசுப் பணிகளை நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறாா். ஓரிரு நாள்களுக்கு முன் துக்க நிகழ்ச்சிக்கு சென்று வந்த நிலையில் அவருக்கு காய்ச்சல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, கரோனா தொற்று பரிசோதனை மேற்கொண்டாா்.

இதில் அவருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. அதனைத் தொடா்ந்து பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். அவா் எந்தவிதப் பாதிப்புமின்றி நலமுடன் இருப்பதாக அவரது ஆதரவாளா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

தொடர் வெற்றியை ருசிக்குமா ஆர்சிபி?

ரேவண்ணா வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

SCROLL FOR NEXT