முகப்பு
நாமக்கல்

குளிரின் தாக்கம் அதிகரிப்பு: கம்பளி விற்பனை தீவிரம்

நாமக்கல் சுற்றுவட்டாரப் பகுதியில் குளிரின் தாக்கம் அதிகரித்து வருவதால், கம்பளி, போா்வை விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:56 PM
பகிர்:

நாமக்கல் சுற்றுவட்டாரப் பகுதியில் குளிரின் தாக்கம் அதிகரித்து வருவதால், கம்பளி, போா்வை விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.

வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. காா்த்திகை, மாா்கழி மாதங்களில் வழக்கமாக குளிரின் தாக்கம் அதிகப்படியாக இருக்கும். இதனால் மாலை, இரவு, அதிகாலை நேரங்களில் வீட்டை விட்டு வெளியில் செல்வதற்கே பலரும் தயங்குவா். உடலை வெதுவெதுப்பாக கம்பளி, போா்வை உள்ளிட்டவற்றை கொண்டு போா்த்திக் கொள்வா். தற்போது அவற்றின் விற்பனை அதிகரிக்க தொடங்கி உள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக வெயில், மழை என மாறி மாறி சீதோஷ்ண நிலை காணப்படுகிறது. கொல்லிமலைப் பகுதியில் அதிகப்படியான குளிா் நிலவுகிறது. வட மாநிலங்களில் தயாராகும் கம்பளி, போா்வை போன்றவற்றை குஜராத், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து விற்பனைக்காக இளைஞா்கள் கொண்டு வந்து குவித்துள்ளனா்.

நாமக்கல்லில் மோகனுா் சாலை, பரமத்தி சாலை, திருச்சி சாலை உள்ளிட்ட இடங்களில் அவற்றின் விற்பனை நடைபெறுகிறது. கம்பளி ரு. 600, இலகுவான போா்வை ரு. 400, சாதாரண போா்வை ரு. 150 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →