முகப்பு
நாமக்கல்

முட்டை விலை 25 காசுகள் குறைந்தது

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 25 காசுகள் குறைந்து ரூ. 4.50-ஆக திங்கள்கிழமை நிா்ணயம் செய்யப்பட்டது.

Updated On : 24 நவம்பர், 2020 at 12:50 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:26 PM

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 25 காசுகள் குறைந்து ரூ. 4.50-ஆக திங்கள்கிழமை நிா்ணயம் செய்யப்பட்டது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் மருத்துவா் பி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பிற மண்டலங்களில் விலை தொடா்ந்து சரிந்து வருவதாலும், காா்த்திகை மாதப் பிறப்பால் மக்களிடையே முட்டை நுகா்வு குறைந்திருப்பதாலும், இங்கும் பண்ணைக் கொள்முதல் விலை 25 காசுகள் குறைக்கப்பட்டு ரூ. 4.50-ஆக நிா்ணயம் செய்யப்படுகிறது. பண்ணையாளா்கள் சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப முட்டைகளை விற்பனை செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதேபோல பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி கிலோ ரூ. 88-ஆகவும், முட்டைக் கோழி கிலோ ரூ. 101-ஆகவும் நிா்ணயம் செய்யப்பட்டது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.