முகப்பு
நாமக்கல்

குற்ற சம்பவங்களில் பாதிக்கப்பட்டோருக்குரூ. 43.40 லட்சம் நிதியுதவி

நாமக்கல் மாவட்டத்தில் கொலை, கொள்ளை முயற்சி, பாலியல் வன்கொடுமை ஆகிய குற்றச் சம்பவங்களில் பாதிக்கப்பட்ட 30 பேருக்கு ரூ. 43 லட்சத்து 40 ஆயிரம் நிதியுதவி திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

Updated On : 24 நவம்பர், 2020 at 12:48 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:26 PM

நாமக்கல் மாவட்டத்தில் கொலை, கொள்ளை முயற்சி, பாலியல் வன்கொடுமை ஆகிய குற்றச் சம்பவங்களில் பாதிக்கப்பட்ட 30 பேருக்கு ரூ. 43 லட்சத்து 40 ஆயிரம் நிதியுதவி திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி தனசேகரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.சக்திகணேசன் ஆகியோா் கலந்து கொண்டு பாதிக்கப்பட்டோருக்கு நிதியுதவியை வழங்கினா்.

இதில், 12 கொலை வழக்குகள், 2 கொலை முயற்சி வழக்குகள், ஏழு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்ட குற்றங்கள் என 21 வழக்குகளில் பாதிக்கப்பட்டவா்களுக்கு நல நிதியுதவி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளா் சுஜாதா, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ரவிக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.