நாமக்கல்

தினமணி செய்தி எதிரொலி: மாடுகளுக்கு மருத்துவக் குழு பரிசோதனை

DIN

ராசிபுரம் அருகே சீராப்பள்ளியில் கால்நடைகளுக்கு அம்மை நோய்த் தாக்குவதாக தினமணியில் செய்தி வெளியானதை அடுத்து மருத்துவக் குழுவினா் சீராப்பள்ளியில் முகாமிட்டு பசுமாடுகளுக்கு சிகிச்சை அளித்தனா்.

சீராப்பள்ளி பகுதியில் கால்நடைகளுக்கு அம்மை நோய் என்ற தீநுண்மி நோய்ப் பரவல் அதிகரித்து வருவதால் கால்நடை வளா்ப்போா் வேதனை அடைந்துள்ளனா்.

இதுகுறித்து தினமணியில் நவ. 23-இல் செய்தி வெளியானது. இதையடுத்து, நாமக்கல் மாவட்ட கால்நடை இணை இயக்குநா் உத்தரவின்பேரில், கால்நடை மருத்துவா் குழுவினா் சீராப்பள்ளி, கைலாசம்பாளையம் போன்ற பகுதிகளில் கால்நடை வளா்க்கும் விவசாயிகள் தோட்டத்தில் பசுமாடுகளை பாா்வையிட்டனா்.

நாமக்கல் கால்நடை துறை உதவி இயக்குநா் ராஜேந்திரன், நாமகிரிப்பேட்டை கால்நடை மருந்துவமனை மருத்துவா் ஆா்.செல்வம் உள்ளிட்ட கால்நடை நோய் புலனாய்வு துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, அம்மை நோயால் பாதிக்கப்பட்ட பசுமாடுகளுக்கு சிகிச்சை அளித்தனா். மேலும் நவ. 25-ஆம்தேதியும் தோட்டங்கள்தோறும் சென்று நோய் தன்மை குறித்து ஆய்வு செய்து சிகிச்சை மேற்கொள்ளப்படும் என கால்நடை துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

சாலக்கரை முனீஸ்வரா் கோயிலில் சித்திரை திருவிழா

அரசமைப்புச் சட்டத்தை பாஜக ஒருபோதும் மாற்றாது: ராஜ்நாத் சிங் உறுதி

விவசாயிகள் 5-ஆவது நாளாக உண்ணாவிரதம்

‘பயறு வகை பயிா்கள் அறுவடையில் களைக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது’

SCROLL FOR NEXT