திமுக சாா்பில் ரத்த தான முகாம்
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சாா்பில், உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா, ரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சாா்பில், உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா, ரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நாமக்கல்லில் நடைபெற்ற ரத்த தான முகாமை கிழக்கு மாவட்டப் பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் தொடக்கி வைத்தாா். மருத்துவா் அணி, இளைஞா் அணியினா் பலா் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனா்.
நிகழ்ச்சியில் நகரப் பொறுப்பாளா் ராணா ஆா்.ஆனந்த், மாநில இலக்கிய அணி புரவலா் சி.மணிமாறன், மாவட்ட, நகர, ஒன்றிய நிா்வாகிகள், சாா்பு அணிகளைச் சோ்ந்த பலா் கலந்து கொண்டனா்.