ராசிபுரம் அருகே விபத்தில் படுகாயமடைந்த காவல் உதவி ஆய்வாளர் மரணம்
ராசிபுரம் அருகே விபத்தில் படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காவல்துறை உதவி ஆய்வாளர் மரணமடைந்தார்.
ராசிபுரம் அருகே விபத்தில் படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காவல்துறை உதவி ஆய்வாளர் மரணமடைந்தார்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள புதுச்சத்திரம் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை லாரியுடன் மற்றொரு வேன் மோதியதில் விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் வேன் வரவழைக்கப்பட்டு காவல்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பின்னால் வந்த மற்றொரு பார்சல் வேன் மோதியதில் மீண்டும் அதே பகுதியில் விபத்து ஏற்பட்டு சம்பவ இடத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் தலைமை காவலர் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் உள்ளிட்டோர் காயமடைந்தனர்.
இதில் தலையில் படுகாயமடைந்து கோமா நிலைக்கு சென்ற புதுச்சத்திரம் காவல் உதவி ஆய்வாளர் செல்வராஜ் (54 ) சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.