நாமக்கல்லில் திமுக சார்பில் மரத்தடியில் நடந்த கிராம சபைக் கூட்டம்
தமிழகஅரசு அறிவித்த கிராம சபைக் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் நாமக்கல்லில் திமுக சார்பில் ஆங்காங்கே பெண்களை திரட்டி கூட்டம் நடைபெற்றது.
தமிழகஅரசு அறிவித்த கிராம சபைக் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் நாமக்கல்லில் திமுக சார்பில் ஆங்காங்கே பெண்களை திரட்டி கூட்டம் நடைபெற்றது.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 322 கிராம ஊராட்சிகளிலும் வெள்ளிக்கிழமை கிராம சபைக் கூட்டம் நடைபெறுவதாக ஆட்சியரால் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் வியாழக்கிழமை அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறவிருந்த கிராமசபைக் கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக தலைமைச் செயலரால் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் ஆங்காங்கே கிராமசபைக் கூட்டங்கள் நடைபெற்றன. நாமக்கல் அருகே ரெட்டிப்பட்டி ஊராட்சியில் திமுக சார்பில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்திற்கு கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ் குமார் தலைமை வகித்தார். இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர்.
100 நாள் வேலைத்திட்டத்தில் கையெழுத்திட வேண்டும் என்று பெண்களை கூட்டத்திற்கு அழைத்து வந்ததாக புகார் எழுந்தது. ஆனால் திமுக சார்பில் இதனை மறுத்தனர். கூட்டத்தில் திமுக அரசின் சாதனைகள் குறித்தும், அதிமுக அரசின் செயல்பாடுகள் குறித்தும் நிர்வாகிகள் பேசினர்.