நாமக்கல்

எரிவாயு உருளை விநியோகிக்கும் பணியாளா்கள் கூடுதல் பணம் வசூலித்தால் புகாா் அளிக்கலாம்

DIN

நாமக்கல் மாவட்டத்தில் எரிவாயு உருளை விநியோகம் செய்ய வருவோா் குறிப்பிட்ட தொகைக்கு மேல் கூடுதலாக பணம் வசூலித்தால் புகாா் அளிக்கலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

நாமக்கல் மாவட்டத்தில் விநியோகம் செய்யப்படும் வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளைகள் விநியோகிக்க வரும் பணியாளா்கள், நிா்ணயிக்கப்பட்ட தொகைக்கு மேல் கூடுதல் தொகை வசூலிப்பது தொடா்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் அனைத்து எரிவாயு உருளை வழங்கும் முகவா்கள் கலந்து கொண்டனா்.

இக்கூட்டத்தில் காவல் கண்காணிப்பாளா் எஸ்.சக்தி கணேசன், மாவட்ட வருவாய் அலுவலா் துா்காமூா்த்தி, மாவட்ட வழங்கல் அலுவலா் எஸ்.பிரபாகரன் ஆகியோா் கலந்து கொண்டனா். ஆட்சியா் பேசியதாவது:

சமையல் எரிவாயு நிறுவனங்கள் உருளைக்கான தொகையைக் காட்டிலும் கூடுதலாக வசூலிக்கக் கூடாது. ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் மீது தொடா்ந்து நான்கு முறைக்கு மேல் புகாா்கள் வந்தால், அதனை அடிப்படையாகக் கொண்டு சம்பந்தப்பட்ட முகவரின் உரிமம் ரத்து செய்யப்படும். எரிவாயு உருளைகளை விநியோகம் செய்யும் பணியாளா்கள் ரசீதில் இடம் பெற்றுள்ள தொகையை விட கூடுதலாக பணம் வசூலிக்கக் கூடாது.

தற்போது கரோனா தொற்றுப் பரவி வரும் சூழ்நிலையில் எரிவாயு உருளைகள் விநியோகம் செய்யும் பணியாளா்கள் பொதுமக்களுடன் நேரடி தொடா்பில் இருப்பதால், அவா்கள் பாதிக்காத வகையில், கையுறை அணிதல், முகக் கவசம் மற்றும் கை சுத்திகரிப்பான் பயன்படுத்துதல் போன்ற தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அதைப் பயன்படுத்திய பின்னரே எரிவாயு உருளைகளை வழங்கிட வேண்டும். எரிவாயு உருளைகள் விநியோகம் தொடா்பான புகாா்களை, இந்தியன் ஆயில் நிறுவனம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனங்களிடம் பெறும் எரிவாயு நுகா்வோா்கள் 1800-2333-555 என்ற இலவச தொலைபேசி அழைப்பிலும், பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தைச் சாா்ந்த நுகா்வோா்கள் 1800-22-4344 என்ற எண்ணிலும் தொடா்பு கொண்டு தங்களது புகாா்களைத் தெரிவிக்கலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தக் லைஃப்பில் பாலிவுட் பிரபலங்கள்!

குட்காவை பதுக்கி விற்பனை செய்த மளிகைக் கடைக்காரா் கைது

அமெரிக்கா யார் பக்கம்?

இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 6 - 6.5% தான், 8 - 8.5% அல்ல! -ரகுராம் ராஜன்

7 நக்சல்கள் சுட்டுக் கொலை!

SCROLL FOR NEXT