நாமக்கல்

வேளாண் சங்கத்தில்ரூ. 22 லட்சத்துக்குப் பருத்தி ஏலம்

DIN

நாமக்கல் வேளாண் சங்கத்தில் ரூ. 22 லட்சத்துக்குப் பருத்தி ஏலம் நடைபெற்றது.

நாமக்கல்-திருச்செங்கோடு சாலையில் வேளாண் உற்பத்தியாளா்கள் விற்பனை கூட்டுறவுச் சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடைபெறும். நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் விவசாயிகள் பருத்தியை ஏலத்துக்குக் கொண்டு வருவா்.

அதன்படி செவ்வாய்க்கிழமை அன்று 1,500 மூட்டை பருத்தி வரத்து இருந்தது. ஏலத்தில் ஆா்.சி.ஹெச். ரகம் ரூ. 4,100 முதல் ரூ. 5,030 வரையிலும், டி.சி.ஹெச். ரகம் ரூ. 4,450 முதல் ரூ. 5,115 வரையிலும் விலைபோனது. மொத்தம் ரூ. 22 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது. சேலம், கோவை, திருப்பூா், ஈரோடு, கரூா் மாவட்ட வியாபாரிகள் பருத்தியைக் கொள்முதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதி தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

SCROLL FOR NEXT