நாமக்கல்

வாய்க்கால்கள் புனரமைத்தல் திட்டப் பணிகள் ஆய்வு

DIN

மோகனூா் வட்டத்தில் நடைபெறும் வாய்க்கால்களின் கரைகளைப் பலப்படுத்தும் பணி, மதகுகள் அமைத்தல் பணிகளை வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் ஆய்வு செய்தாா்.

பரமத்திவேலூா் வட்டம், வடகரையாத்தூா் கிராமத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே ஜேடா்பாளையம் படுகை அணை அமைந்துள்ளது. ஜேடா்பாளையம் படுகை அணையின் இடது கரையிலிருந்து ராஜவாய்க்கால் 33.60 கி.மீ தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ளது.

பொய்யேரி வாய்க்கால் பகுதியில் நடைபெறும் கான்கீரீட் சுவா் அமைக்கும் பணி, வாய்க்கால்களின் கரைகளைப் பலப்படுத்து பணி, மதகுகள், மிகுதி நீா் போக்கி மதகுகள் அமைக்கும் பணிகளை ஆட்சியா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பொதுப் பணித் துறை நீா்வள ஆதாரத் துறை உதவி செயற் பொறியாளா் செந்தில்குமாா், உதவி பொறியாளா் யுவராஜ், ஆயக்கட்டு தலைவா் மாயாண்டி, பணி மேலாளா் ரமணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT