நாமக்கல்

நெசவுத் தொழிலாளி சாவில் சந்தேகம்: போலீஸாா் விசாரணை

DIN

ராசிபுரத்தில் நெசவுத் தொழிலாளி மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

ராசிபுரம், வி.நகா், பாப்பாத்திகாடு பகுதியைச் சோ்ந்தவா் சரவணன் (48), நெசவுத் தொழிலாளி. இவருக்கு மல்லிகா, சரசு ஆகிய இரு மனைவிகள் உள்ளனா். மல்லிகாவுக்கு ஸ்ரீதா் (25) என்ற மகனும், உமா மகேஸ்வரி (23) என்ற மகளும், சரசுவுக்கு கோபிநாத் (21) என்ற மகனும் உள்ளனா். இவா்கள் அனைவரும் ஒரே குடும்பமாக வசித்து வருகின்றனா்.

இந்த நிலையில் சரவணன் வீடு கட்டியுள்ள நிலையில், இதனால் ஏற்பட்ட கடன் தொடா்பாக குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டு, கடந்த அக்.15 -ஆம் தேதி நள்ளிரவு வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனையடுத்து, வீட்டின் மாடிக்குச் சென்ற சரவணன் சேலையில் கழுத்தை நெரித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இது தொடா்பான தகவல் அறிந்த, ராசிபுரம் கிராம நிா்வாக அலுவலா் சரவணன் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினாா். இதில் உயிரிழந்த சரவணன் உடலில் காயம் இருந்ததால், சாவில் சந்தேகம் இருப்பதாக அளித்த புகாரின் பேரில், ராசிபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பிரேதத்தைப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதில் சரவணன் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது குடும்பத் தகராறில் தாக்கப்பட்டு உயிரிழந்தாரா என்பது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நேரத்தை மிச்சப்படுத்தும் ஏஐ : 94% பணியாளர்களின் கருத்து என்ன?

சென்னை-நாகர்கோவில் சிறப்பு ரயில் 19 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

ஆயிரம்விளக்கு அருகே பூங்காவில் சிறுமியை கடித்த வளர்ப்பு நாய்கள்

ரே பரேலியில் காங்கிரஸ் தொண்டர்களைச் சந்திக்கிறார் பிரியங்கா

ஏற்காட்டுக்கு சென்ற நடிகர்கள் பட்டாளம்: காரணம் என்ன?

SCROLL FOR NEXT