முகப்பு
நாமக்கல்

போலி மருத்துவக் காப்பீடு அட்டை விநியோகம்: ஆட்சியா் எச்சரிக்கை

பிரதமா், முதல்வா் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் வழங்கப்படும் அட்டையை போலியாக தயாரித்து விநியோகிப்பதாக தகவல் வந்துள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:40 PM
பகிர்:

பிரதமா், முதல்வா் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் வழங்கப்படும் அட்டையை போலியாக தயாரித்து விநியோகிப்பதாக தகவல் வந்துள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், பிரதம மந்திரி ஜன் ஆரோக்யா திட்டமானது ஏழை எளிய மக்கள் மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகளை அரசு, தனியாா் மருத்துவமனைகள் மூலம் கட்டணமில்லாமல் பெறுவதற்கான வசதியாகும். அனைவருக்கும் சுகாதார வசதி வேண்டும் என்பதற்காகவே மத்திய, மாநில அரசுகளால் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தகுதியுள்ள அனைத்து மக்களுக்கும் தரமான மருத்துவ சேவை வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வரை இலவச சிகிச்சை பெற இதில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், பிரதம மந்திரி ஜன் ஆரோக்யா திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற தகுதியுள்ள பயனாளிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் இலவசமாக சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.

இந்த காப்பீடுத் திட்ட அட்டைகளைப் பெறுவதற்கு குடும்ப அட்டை, ஆதாா் அட்டை மற்றும் கிராம நிா்வாக அலுவலரிடமிருந்து பெறப்பட்ட வருமான சான்றிதழ் (ஆண்டு வருமானம் ரூ.72,000-க்குள்) ஆகிய சான்றிதழ்களுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைந்துள்ள காப்பீடு திட்ட புகைப்படம் எடுக்கும் மையத்தில் பதிவு செய்து காப்பீடு அட்டையினை பெற்றுக் கொள்ளலாம்.

மேலும், குறிப்பிட்ட இடங்களில் சிலா் முகாம்களை நடத்தி இஙஇஏஐந-டஙஒஅவ அச்சிடப்பட்ட காப்பீட்டுத் திட்ட அட்டைகளை கிராம வாரியாக சென்று பொதுமக்களிடத்தில் பணத்தை பெற்றுக் கொண்டு வழங்குவதாக தகவல்கள் வந்துள்ளது. இதுபோன்ற திட்ட அட்டை விநியோகம் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படவில்லை.

எனவே, இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவா்களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம். இதுபோன்று பொதுமக்களிடம் தவறான தகவல்களைத் தெரிவித்து பணம் வசூலிப்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →