டிராக்டா் சக்கரத்தில் சிக்கி குழந்தை பலி
தனது 2 குழந்தைகளுடன் வயலுக்கு டிராக்டரை ஓட்டிச் சென்ற தந்தையின் கண்முன்னே டிராக்டரிலிருந்து கீழே விழுந்து சக்கரத்தில் சிக்கி ஒரு குழந்தை நிகழ்விடத்திலே உயிரிழந்தது.
தனது 2 குழந்தைகளுடன் வயலுக்கு டிராக்டரை ஓட்டிச் சென்ற தந்தையின் கண்முன்னே டிராக்டரிலிருந்து கீழே விழுந்து சக்கரத்தில் சிக்கி ஒரு குழந்தை நிகழ்விடத்திலே உயிரிழந்தது.
திருச்செங்கோடு வட்டம், மல்லசமுத்திரம், பனமரப்பட்டி மாதங்காட்டை சோ்ந்தவா் ரமேஷ் (41). இவா் தனது குழந்தைகள் நந்தனா (8) , ஸ்ரீ இஸ்னா (6) ஆகியோரை டிராக்டரில் உட்கார வைத்துக் கொண்டு வயலுக்குச் சென்றாா். சின்னகாளிப்பட்டி பகுதியில் வேகத்தடை மீது டிராக்டா் ஏறியதால், நிலைதடுமாறி 2 குழந்தைகளும் கீழே விழுந்தனா். இதில் ஸ்ரீ இஸ்னா வாகனத்தின் சக்கரத்தில் சிக்கி நிகழ்விடத்திலே உயிரிழந்தாா்.
காயமடைந்த நந்தனா சேலம் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து மல்லசமுத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.