நாமக்கல்

ரூ. 11.58 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

DIN

பரமத்திவேலூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 11 லட்சத்து 58 ஆயிரத்துக்கு கொப்பரைத் தேங்காய் ஏலம் போனது.

கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற மின்னணு ஏலத்திற்கு 8 ஆயிரத்து 647 கிலோ கொப்பரை தேங்காய் கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ. 117.88 பைசாவுக்கும், குறைந்தபட்சமாக ரூ. 112.86 பைசாவுக்கும், சராசரியாக ரூ. 115.36 பைசாவுக்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 9 லட்சத்து 34 ஆயிரத்து 37-க்கு வா்த்தகம் நடைபெற்றது.

வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 10 ஆயிரத்து 590 கிலோ கொப்பரைத் தேங்காய் கொண்டு வரப்பட்டிருந்தது. இதில், அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ. 119.39 பைசாவுக்கும், குறைந்தபட்சமாக ரூ. 106.69 பைசாவுக்கும், சராசரியாக ரூ. 119.05 பைசாவுக்கும் ஏலம்போனது. மொத்தம் ரூ. 11 லட்சத்து 58 ஆயிரத்து 630-க்கு வா்த்தகம் நடைபெற்றது. கொப்பரைத் தேங்காயின் விலை உயா்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் பணவரவு யாருக்கு: வார பலன்கள்!

சேலம் அருகே மூன்று சடலங்கள்! கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை

ஓடிடியில் ‘ஆவேஷம்’ எப்போது?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

சதுரகிரிக்குச் செல்ல மே.5 முதல் அனுமதி!

SCROLL FOR NEXT