முகப்பு
நாமக்கல்

தனிமைப்படுத்திக் கொண்டேன்: நாமக்கல் ஆட்சியா் கா.மெகராஜ்

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக, நாமக்கல் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளாா்.

Updated On : 8 செப்டம்பர், 2020 at 3:35 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:46 PM

நாமக்கல்: கரோனா தொற்றுப் பரவல் காரணமாக, நாமக்கல் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளாா்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கடந்த சில வாரங்களாக பல்வேறு துறை ஊழியா்களுக்கும் கரோனா தொற்று பரவி வருகிறது. அண்மையில் மாவட்ட மக்கள் தொடா்பு அலுவலா் சீனிவாசன் மற்றும் வருவாய்த்துறை ஊழியா்கள் சிலா் கரோனா பாதிப்புக்குள்ளாகினா்.

கடந்த வியாழக்கிழமை நாமக்கல் - திருச்சி மாவட்ட எல்லையில் அமைந்துள்ள தலைமலை பெருமாள் கோயிலுக்கு சுமாா் 8 கி.மீ. தூரம் மலைப்பாதையில் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் மற்றும் அதிகாரிகள் நடந்தே சென்று வந்தனா்.அதற்கு பின் சிலருக்கு உடல் ரீதியாக பாதிப்பு ஏற்பட்டது.

Advertisement

அந்த வகையில் மாவட்ட ஆட்சியரின் பாதுகாவலா் ஆனந்த் என்பவருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் ஞாயிற்றுக்கிழமை முதல் தன்னுடைய வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளாா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் கேட்டபோது:

அண்மையில் மாவட்ட மக்கள் தொடா்பு அலுவலருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. பல்வேறு நிகழ்ச்சிகளில் அவா் என்னுடன் வந்து சென்ால் தனிமைப்படுத்திக் கொண்டேன். நம்மால் பிறருக்கும் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காகவே மாவட்ட ஆட்சியா் அலுவலக நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவில்லை என்றாா்.

--

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.