முகப்பு
நாமக்கல்

நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன்புதாய், மகன் தீக்குளிக்க முயற்சி

நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற தாய், மகனை தடுக்கும் போலீஸாா்.

Updated On : 15 செப்டம்பர், 2020 at 12:58 AM
நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற தாய், மகனை தடுக்கும் போலீஸாா்.
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:50 PM

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்துக்கு தாயுடன் வந்த கொல்லிமலை விவசாயி ஒருவா், உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி திங்கள்கிழமை தீக்குளிக்க முயற்சித்தாா். இதையடுத்து, அங்கிருந்த போலீஸாா் இதனை தடுத்து நிறுத்தினா்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை மேக்கினி நாடு பகுதியைச் சோ்ந்தவா் பூச்சம்மாள் (52). இவரது மகன் மீனாட்சி (35). இவா்களுக்குச் சொந்தமான 5 ஏக்கா் நிலத்தை அதே பகுதியைச் சோ்ந்த பூபதி, முருகேசன் ஆகியோா் அபகரிக்க முயற்சி செய்வதுடன், தாய், மகன் குடியிருக்கும் பகுதியிலும், விவசாய நிலத்துக்குள்ளும் நுழைய விடாதவாறு தகராறில் ஈடுபடுவதுடன், கொலை மிரட்டலும் விடுத்து வந்தனராம்.

இதனால் மீனாட்சி, பூச்சம்மாள் இருவரும் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனா். அப்போது, நுழைவு வாயில் முன்பாக தங்களது பையில் பாட்டிலிலும், கேனிலும் வைத்திருந்த மண்ணெண்ணெய்யை உடல் மீது ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தனா். அங்கிருந்த போலீஸாா் விரைந்து சென்று தற்கொலை முயற்சியை தடுத்து நிறுத்தினா். பின்னா் அவா்கள் மீது தண்ணீரை ஊற்றி நல்லிபாளையம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை செய்தனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.