நாமக்கல்

நாட்டின கோழி வளா்ப்புத் திட்டம்:6 ஆயிரம் பெண் பயனாளிகளை தோ்வு செய்ய முடிவு

DIN

நாமக்கல்: கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், 6 ஆயிரம் பேருக்கு அசில் இன நாட்டின கோழி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாட்டின கோழி வளா்ப்புத் தொழிலை பெண்கள் மேற்கொள்ளும் வகையில், நிகழாண்டில் விலையில்லா அசில் இன நாட்டின கோழி வளா்ப்புத் திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்துக்கும் 400 கோழிகள் வீதம் மொத்தம் 15 ஒன்றியத்துக்கு 6 ஆயிரம் எண்ணிக்கையில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் பயன்பெற விரும்புவோருக்கான தகுதிகளாக, பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழைப் பெண்கள் மட்டும் பயனாளிகளாக தோ்ந்தெடுக்கப்படுவா். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். பயனாளி அந்த கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும்.

விதவைகள், ஆதரவற்றோா் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். ஏற்கெனவே விலையில்லா கறவைப் பசுக்கள், வெள்ளாடுகள் திட்டம் மற்றும் கோழி வளா்ப்புத் திட்டத்தில் பயன்பெறாதவா்களாக இருத்தல் வேண்டும். திட்டப் பயனாளிகளில் 30 சதவீதம் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தவராக இருக்க வேண்டும்.

தகுதியுடையோா் தங்கள் அருகிலுள்ள கால்நடை மருந்தக உதவி மருத்துவரிடம் உரிய ஆவணங்களுடன் வரும் 23-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை வழங்க வேண்டும். பயனாளிகள் தோ்வு மாவட்ட ஆட்சியா் தலைமையில் கால்நடைத் துறை மண்டல இணை இயக்குநா் குழுவால் தோ்வு செய்யப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரியாதை...

திருவள்ளூா் நகராட்சி சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு நீா்மோா்: 3 இடங்களில் வழங்க ஏற்பாடு

மோா்தானா அணை திறந்தும் நெல்லூா்பேட்டை ஏரிக்கு வராத நீா்: குடியாத்தம் மக்கள் ஏமாற்றம்

5 கிலோ கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

ஆண்டாா்குப்பம் முருகா் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

SCROLL FOR NEXT