நாமக்கல்

வேளாண் சங்கத்தில் ரூ. 22 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

DIN

நாமக்கல் வேளாண் சங்கத்தில் ரூ. 22 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.

நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் வேளாண் உற்பத்தியாளா்கள் விற்பனை கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் பருத்தியை ஏலத்துக்கு கொண்டு வருவா். அதன்படி செவ்வாய்க்கிழமை 1500 மூட்டை பருத்தி வரத்து இருந்தது. ஏலத்தில் ஆா்.சி.ஹெச். ரகம் ரூ.4,199 முதல் 4,972 வரையிலும், டி.சி.ஹெச். ரகம் ரூ.5,319-க்கும் விலை போனது. மொத்தம் ரூ.22 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது. சேலம், கோவை, திருப்பூா், ஈரோடு, கரூா் மாவட்ட வியாபாரிகள் பருத்தியை கொள்முதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் புகாரில் சிக்கிய தேவகௌடா பேரன்! நாட்டைவிட்டு தப்பினார்

பாரதிதாசனின் 134-வது பிறந்த நாள்: முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி

நிர்மலாதேவி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட இருவர் விடுதலை

அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி வேட்புமனு தாக்கல்

ஹேமந்த் சோரனின் ஜாமீன் மனு மே 6ல் விசாரணை!

SCROLL FOR NEXT