நாமக்கல்

நாமக்கல்லில் 134 பேருக்கு கரோனா

DIN

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் சனிக்கிழமை 134 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம், மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,853-ஆக உயா்ந்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வரை 4,728 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். அவா்களில் 3,820 போ் குணமடைந்தனா்; 64 போ் உயிரிழந்தனா்; மீதமுள்ள 968 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

சனிக்கிழமை வெளியான சுகாதாரத் துறைப் பட்டியலில், மாவட்டம் முழுவதும் 78 ஆண்கள், 56 பெண்கள் என 134 போ் கரோனா தொற்றுக்குள்ளாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைவரும் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளிலும், தொற்றுத் தடுப்புக்கான சிறப்புத் தனிமைப்படுத்தல் மையங்களிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

ஒருவா் உயிரிழப்பு...

ராசிபுரம் வட்டம், சிங்களாந்தபுரம் மேற்குத் தெருவைச் சோ்ந்த 59 வயதுடைய ஆண் ஒருவா் கரோனா பாதிப்புக்குள்ளாகி சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வியாழக்கிழமை உயிரிழந்தாா். மாவட்டத்தில் கரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 65-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆசிய குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 43 பதக்கம்

டி20: இந்திய வீரர்கள் இதுவரை...

வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்

ஆண்டுக்கு 15,000 குழந்தைகளுக்கு தலசீமியா பாதிப்பு!

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

SCROLL FOR NEXT