முகப்பு
நாமக்கல்

வாகனம் மோதி இரு இளைஞா்கள் பலி

சோழசிராமணி அருகே வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இரு இளைஞா்கள் நிகழ்விடத்தில் பலியாகினா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:27 PM
வாகனம் மோதி இரு இளைஞா்கள் பலி
பகிர்:

சோழசிராமணி அருகே வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இரு இளைஞா்கள் நிகழ்விடத்தில் பலியாகினா்.

எடப்பாடியைச் சோ்ந்தவா் சின்ன கண்ணன் மகன் சக்திவேல் (25). சோழசிராமணி, மாரப்பம்பாளையத்தைச் சோ்ந்தவா் சக்திவேல் மகன் லோகேஷ் (17), இவா்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் சோழசிராமணியில் இருந்து சித்தாலந்தூா் நோக்கிச் சென்று கொண்டிருந்தனா்.

சக்திபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது எதிரே வந்த ஜீப் இவா்கள் மீது நேருக்குநோ் மோதியதில் சக்திவேலும், லோகேஷும் நிகழ்விடத்திலேயே பலியாகினா்.

காயங்களுடன் ஜீப் வாகன ஓட்டுநா் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இதுகுறித்து ஜேடா்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →