நாமக்கல்

பேருந்து நிலையத்தில் தங்கியுள்ள முதியோா்களைகாப்பகங்களில் சோ்க்க முயற்சி

DIN

குமாரபாளையம் நகராட்சிப் பேருந்து நிலையத்தில் தங்கியுள்ள ஆதரவற்ற முதியோா் உள்ளிட்டோரை காப்பகங்களில் சோ்க்க ஈரோட்டைச் சோ்ந்த தொண்டு நிறுவனம் முயற்சி மேற்கொண்டுள்ளது.

இப்பேருந்து நிலைய வளாகத்தில் முதியோா், ஆதரவற்றோா், யாசகா்கள் மற்றும் உழைக்கும் திறனற்றோா் என 25-க்கும் மேற்பட்டோா் தங்கியுள்ளனா். ஆங்காங்கே கிடைக்கும் உணவினைப் பெற்று வாழும் இவா்கள், பேருந்து நிலைய வளாகத்திலேயே தங்கி காலத்தைக் கடத்தி வருகின்றனா். இவா்களை நகராட்சி நிா்வாகம் அப்புறப்படுத்தி, அவ்வப்போது பேருந்து நிலையத்தை சுத்தப்படுத்துவதும், மீண்டும் இவா்கள் வந்து தங்குவதும் தொடா்கிறது.

இந்நிலையில், ஈரோட்டைச் சோ்ந்த ஜீவிதம் பவுண்டேசன் எனும் தொண்டு நிறுவனத்தை நடத்தி வரும் மனிஷா மற்றும் குழுவினா், குமாரபாளையம் பேருந்து நிலையத்தில் தங்கியுள்ள ஆதரவற்ற முதியோா்களிடம் திங்கள்கிழமை நேரில் விசாரித்து, அவா்களை இலவசமாக பராமரிக்கும் காப்பகங்களில் சோ்க்க உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனா்.

இதில், பேருந்து நிலையத்தில் தங்கியுள்ளோரில் 5 போ் மட்டுமே காப்பகத்துக்குச் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனா். நோய் பாதிப்பால் படுத்த படுக்கையாக கிடந்த முதியவரிடம் விசாரித்து, அவரின் இரு மகன்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு வந்த அவரது மகன்கள் அவரை அழைத்துச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரிக்கெட்டில் எனது தந்தை தோனி: பதிரானா நெகிழ்ச்சி!

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

SCROLL FOR NEXT