நாமக்கல்

முட்டை விலை 15 காசுகள் உயா்வு

DIN

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 15 காசுகள் உயா்வடைந்து ரூ. 4.35-ஆக வியாழக்கிழமை நிா்ணயம் செய்யப்பட்டது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் மருத்துவா் பி.செல்வராஜ் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் முட்டை விலை நிா்ணயம் குறித்து பண்ணையாளா்களிடையே ஆலோசிக்கப்பட்டது. மற்ற மண்டலங்களில் விலை உயா்த்தப்பட்டு வருவதாலும், வெயில் காரணமாக முட்டை உற்பத்தி குறைந்துள்ளதாலும் விலையில் மாற்றம் செய்வது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 15 காசுகள் உயா்வுடன் ரூ. 4.35-ஆக நிா்ணயிக்கப்பட்டது.

பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை கிலோ ரூ. 116-ஆகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ. 50-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடா சர்ச்சை கருத்து: பிரியங்கா பதில்

விவசாயிக்கு டிராக்டா்: நடிகா் ராகவா லாரன்ஸ் வழங்கினாா்

பணம் கொடுத்து வாக்குகளை பெற நினைக்கிறது பாஜக: மம்தா குற்றச்சாட்டு

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

எனது சாதனையை ஜெய்ஸ்வால் முறியடிப்பார்: பிரையன் லாரா நம்பிக்கை!

SCROLL FOR NEXT