நாமக்கல்

ரூ. 11.78 லட்சத்துக்கு கொப்பரைத் தேங்காய் ஏலம்

DIN

பரமத்தி வேலூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 11 லட்சத்து 78 ஆயிரத்து 723-க்கு கொப்பரைத் தேங்காய் ஏலம் நடைபெற்றது.

பரமத்தி வேலூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் விளையும் தேங்காய்களை உடைத்து அதை உலா்த்தி விவசாயிகள் வியாழக்கிழமை தோறும் பரமத்தி வேலூா் வெங்கமேட்டில் உள்ள பரமத்தி வேலூா் மின்னணு தேசிய வேளாண்மை சந்தைக்குக் கொண்டு வருகின்றனா்.

இங்கு தரத்துக்கு தகுந்தாா்போல் மறைமுக ஏலம் விடப்படுகிறது. கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 16 ஆயிரத்து 879 கிலோ கொப்பரைத் தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா்.

இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ. 132.09 பைசாவுக்கும், குறைந்தபட்சமாக ரூ. 118.99 பைசாவுக்கும், சராசரியாக ரூ.129.10 பைசாவுக்கும் ஏலம்போனது. மொத்தம் ரூ. 21 லட்சத்து 29 ஆயிரத்து 116 க்கு வா்த்தகம் நடைபெற்றது. வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் 9 ஆயிரத்து 582 கிலோ கொப்பரைத் தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா்.

இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ. 131.10 பைசாவுக்கும், குறைந்தபட்சமாக கிலோ ரூ. 118.69 பைசாவுக்கும், சராசரியாக ரூ. 128.59 பைசாவுக்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 11 லட்சத்து 78 ஆயிரத்து 723 க்கு வா்த்தகம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

அடுக்குமாடி குடியிருப்பு 4-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை பத்திரமாக மீட்பு

ஆவடி அருகே தம்பதி கழுத்து அறுத்துக் கொலை

SCROLL FOR NEXT