நாமக்கல்

கட்டிய 2 மாதத்தில் விரிசல்: கழிவறை இடிக்கப்பட்டு சீரமைப்பு

DIN

புதுச்சத்திரம் அருகே கட்டிய 2 மாதத்தில் விரிசல் ஏற்பட்ட கழிவறைக் கட்டடம் இடிக்கப்பட்டு மீண்டும் சீரமைக்கப்படுகிறது.

நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஒன்றியம், நவணி ஊராட்சி, வானக்காரன்புதூா் அருந்ததியா் தெருவில் 2 மாதங்களுக்கு முன்னா் பொதுக் கழிப்பிடம் ஒன்று கட்டப்பட்டது. தூய்மை பாரத ஊரகத் திட்டத்தின் கீழ் ரூ. 2 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் கட்டப்பட்ட இந்த கழிவறைக் கட்டடம் சில தினங்களுக்கு முன் விரிசல் ஏற்பட்டது.

இடிந்து விழும் நிலையில் உள்ள அந்தக் கட்டடத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். நாமக்கல் மக்களவை உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ் கட்டடத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தாா்.

இதனைப் பாா்வையிட்ட அதிகாரிகள், கட்டடத்தின் ஒரு பகுதியை இடித்து விட்டு மீண்டும் கட்டுவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லைஸ்தானத்தில் பெருமாள் கோயில் தேரோட்டம்

50 சதவீத மானியத்தில் வேளாண் இடுபொருள்கள்

பேராவூரணி நீதிமன்றத்துக்கு கட்டடம் கட்ட இடம்:  உயா்நீதிமன்ற நீதிபதி ஆய்வு

வாக்குப் பதிவு சதவீதத்தை அதிகரித்து பாஜக நாடகம்: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

காவிரி ஒழுங்காற்று குழுத் தலைவரை மாற்ற விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT