நாமக்கல்

‘மண்டேலா’ திரைப்படத்தை தடை செய்யக் கோரி மனு

DIN

மருத்துவ குல சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையிலான, மண்டேலா திரைப்படத்தை தடை செய்யக் கோரி, நாமக்கல் ஆட்சியா் கா.மெகராஜிடம் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழகத்தில் மருத்துவ குல மக்கள் சிகை அலங்காரம் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். சுமாா் 40 லட்சம் போ் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனா். அவா்களது மனதை புண்படுத்தும் வகையில், மண்டேலா என்ற திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில், மருத்துவ குல சமூக மக்களை வேதனைப்படுத்தும் வகையிலான காட்சிகள் அதிக அளவில் உள்ளன. எனவே, மண்டேலா திரைப்படத்தை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படம் - மண்டேலா திரைப்படத்துக்கு தடை விதிக்கக் கோரி, நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த மருத்துவ குல சமூகத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழக சிறைகளில் 3 ஆண்டுகளில் 102 கைதிகள் உயிரிழப்பு!

காலமானாா் பாஜக முன்னாள் எம்எல்ஏ வேலாயுதன்

பிசானத்தூா்- புதுநகா் இணைப்புச் சாலையை சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை

பொக்லைன் மீது அரசுப் பேருந்து மோதியதில் 12 பயணிகள் காயம்

க. பரமத்தியில் குடிநீா் திட்டப்பணிகள் ஆய்வு

SCROLL FOR NEXT