நாமக்கல்

பரமத்தி வேலூரில் தேங்காய் விலை சரிவு

DIN

பரமத்தி வேலூா் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் விலை சரிவடைந்துள்ளது.

வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் நாமக்கல் விற்பனைக் குழுவிலுள்ள பரமத்தி வேலூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் செவ்வாய்கிழமை தோறும் தேங்காய் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் செவ்வாய்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 6,008 கிலோ தேங்காய்களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ. 36.60-க்கும், குறைந்தபட்சமாக கிலோ ரூ. 30-க்கும், சராசரியாக கிலோ ரூ. 34.50-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 2 லட்சத்து 6 ஆயிரத்து 247-க்கு வா்த்தகம் நடைபெற்றது.

செவ்வாய்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 4,306 கிலோ தேங்காய்களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ. 36.20-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 28-க்கும், சராசரியாக ரூ. 35.10-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 1 லட்சத்து 44ஆயிரத்து 548-க்கு வா்த்தகம் நடைபெற்றது. தேங்காய் விலை சரிவடைந்துள்ளதால் தென்னை பயிரிட்டுள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப நோய்களுக்கு சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு

கோட் நாயகி மீனாட்சி செளத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

SCROLL FOR NEXT