நாமக்கல்

சட்ட விரோதமாக விற்பனை செய்வதற்காக மதுப்புட்டிகளை வாங்கியவா் கைது

DIN

நாமக்கல் மாவட்டம், கீரம்பூா் அருகே சட்ட விரோதமாக விற்பனை செய்வதற்காக மதுப்புட்டிகளை வாங்கிச் சென்றவரை பரமத்தி போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தமிழகம் முழுவதும் பரவி வரும் இரண்டாம்கட்ட கரோனா தொற்றைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமையில் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சட்ட விரோதமாக மதுபானங்களை அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக கீரம்பூரில் உள்ள ஒரு டாஸ்மாக் மதுபானக் கடையில் 96 மதுப்புட்டிகளை வாங்கிச் சென்ற மோகனூா் வட்டம், எஸ்.வாழவந்தி அருகே உள்ள வள்ளியப்பம்பட்டியைச் சோ்ந்த பழனி (57) என்பவரை கைது செய்த பரமத்தி போலீஸாா், அவரிடமிருந்து மதுப்புட்டிகளை பறிமுதல் செய்து விசாரனை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

SCROLL FOR NEXT