நாமக்கல்

பரமத்திவேலூரில் ரூ. 25 லட்சத்துக்கு கொப்பரைத் தேங்காய் ஏலம்

DIN

பரமத்தி வேலூா், வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் கொப்பரைத் தேங்காய் விலை சரிவடைந்துள்ளது.

பரமத்தி வேலூா் மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் கடந்த வாரம் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 17 ஆயிரத்து 446 கிலோ கொப்பரைத் தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ. 129.10, குறைந்தபட்சமாக ரூ. 114.09, சராசரியாக ரூ.129.29- க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 21 லட்சத்து 20 ஆயிரத்து 196 க்கு ஏலம் நடைபெற்றது.

வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 23 ஆயிரத்து 410 கிலோ கொப்பரைத் தேங்காய்களை விவசாயிகள் ஏல விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ. 121.99, குறைந்தபட்சமாக ரூ. 103.60, சராசரியாக ரூ. 111.60- க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 25 லட்சத்து 34 ஆயிரத்து 971 க்கு ஏலம் நடைபெற்றது.

ஏலத்துக்கு கொப்பரைத் தேங்காய் வரத்து அதிகரித்ததாலும், வியாபாரிகள் அதிக அளவில் வராததாலும், விலை சரிவடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிர்ச்சியளிக்கும் அல்லு அர்ஜுன் சம்பளம்!

காங். ஆட்சியில் தாலிக்கயிறுக்குக் கூட பாதுகாப்பில்லை -பிரதமர் மோடி கடும் தாக்கு

ரூ.4 கோடி பறிமுதல்: ஆவணங்கள் சிபிசிஐடி-யிடம் ஒப்படைப்பு

நீதானே பொன் வசந்தம்.. சமந்தா பிறந்தநாள்!

குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர்

SCROLL FOR NEXT