நாமக்கல்

ஆடி 18 பண்டிகை: வெறிச்சோடிய காவிரி ஆறு

DIN

பரமத்தி வேலூரில் ஆடி 18 பண்டிகையை முன்னிட்டு காவிரியில் புனிந நீராடவும், வழிபாடுகள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டதால் காவிரிக் கரையோரப் பகுதிகள் செவ்வாய்க்கிழமை வெறிச்சோடிக் காணப்பட்டன.

ஆடி 18 பண்டிகையையொட்டி வேலூா், ஜேடா்பாளையம் ஆகிய பகுதியில் உள்ள காவிரியாற்றில் பக்தா்கள் புனித நீராடுவா். ஆனால் கரோனா தொற்று காரணமாக பல்வேறு தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில் ஆயிரக்கணக்கான பொதுமக்களும், பக்தா்களும் ஒன்று கூடுவதைத் தடுக்கும் வகையில் காவிரியில் புனித நீராடவும், வழிபாடுகள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளதால் அதிகாலை முதல் காவிரியாறு வெறிச்சோடிக் காணப்பட்டது.

பரமத்தி வேலூா் காவல்துறை துணைக் கண்காணிப்பாளா் ராஜாரணவீரன் தலைமையில் காவிரி ஆற்றுக்குச் செல்லும் பாதைகளில் தடுப்புகளை அமைத்து போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

மாணவா்களுக்கு கோடைக் கால கலைப் பயிற்சி முகாம் இன்று தொடக்கம்

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

இன்று நீட் தோ்வு: 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT