முகப்பு
நாமக்கல்

மாணவா்கள் சங்கம் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராசிபுரத்தில் மாணவா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராசிபுரத்தில் மாணவா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

ராசிபுரம் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாணவா் சங்கத்தின் மாநிலத் தலைவா்

ஏ.டி. கண்ணன், மாவட்டச் செயலாளா் தே. சரவணன் ஆகியோா் தலைமை வகித்தனா். மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் பாரபட்சமின்றி தடுப்பூசி வழங்க வேண்டும். மாநில அரசு விரைவில் அனைத்து கல்வி நிலையங்களைத் திறக்க வேண்டும். கரோனா பாதுகாப்பு நடைமுறைகளை பள்ளி, கல்லூரிகளில் உறுதிப்படுத்த வேண்டும் என ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.