முகப்பு
நாமக்கல்

ராசிபுரத்தில் நகைக்கடை உரிமையாளர்கள், தொழிலாளர்கள் கடையடைப்பு போராட்டம்

ராசிபுரத்தில், தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம் என்ற மத்திய அரசின் புதிய நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து நகை கடை உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:58 AM
ராசிபுரத்தில் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்ட நகைக்கடை உரிமையாளர்கள், தொழிலாளர்கள்.
பகிர்:

ராசிபுரத்தில், தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம் என்ற மத்திய அரசின் புதிய நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து நகை கடை உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம் என்ற மத்திய அரசின் புதிய நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து,  நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பெரிய கடை வீதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட நகைகடைகள் மற்றும் நகைபட்டறை உரிமையாளர்கள் காலை 9.30 மணி முதல் 11.30 வரை அடைத்து கடைகளின் முன்பாக கோரிக்கை அடங்கிய பதாகையுடன் போராட்டம் நடத்தினர். 

இந்த புதிய நடைமுறையால் சிறு தங்க நகை உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே, ஹால்மார்க் முத்திரை கட்டாயம் என்ற புதிய நடை முறையை ரத்து செய்யவும் அவர்கள் வலியுறுத்தினர். இந்த போராட்டத்திற்கு, ராசிபுரம் நகைக்கடை உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஜெ.ஜெயபிரகாஷ் தலைமை வகித்தார். இதில், 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்துக்கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →