முகப்பு
நாமக்கல்

தற்கொலைக்கு முயன்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

பரமத்தி வேலூரில் குடும்பத் தகராறு காரணமாக உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக் கொண்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:39 AM
பகிர்:

பரமத்தி வேலூரில் குடும்பத் தகராறு காரணமாக உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக் கொண்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

பரமத்தி வேலூா், பாவடி தெருவைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன். இவரது மனைவி ஈஸ்வரி (45). இவா்களுக்கு குழந்தை இல்லை. கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், அண்மையில் மீண்டும் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் மனமுடைந்த ஈஸ்வரி, சமையல் அறைக்கு சென்று மண்ணெண்ணெய்யை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டாா். தீ மளமளவென உடல் முழுவதும் பரவியதில் அலறிய ஈஸ்வரியின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவா்கள் அவரை மீட்டு வேலூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட ஈஸ்வரி, சிகிச்சை பலனின்றி புதன்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து பரமத்தி வேலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →