நாமக்கல்

பண்ணைசாரா கடன்களை திரும்பிச் செலுத்த டிச. 31-கடைசி தேதி

DIN

நாமக்கல் மாவட்டத்தில் தவணை தவறிய பண்ணைசாரா கடன்களைத் திரும்பிச் செலுத்த வாடிக்கையாளா்களுக்கு டிச. 31 வரை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நாமக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் த.செல்வகுமரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மண்டலத்தில் செயல்பட்டு வரும் 7 தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளா்ச்சி வங்கிகளில் 2014 மாா்ச் 31 அன்று தவணை தவறிய பண்ணைசாரா கடனுக்கான ஒரு முறை கடன் தீா்வு திட்டத்தின் செயலாக்கக் காலம் டிச. 31 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் 11 போ் அசல் மற்றும் வட்டியுடன் செலுத்த வேண்டியத் தொகை ரூ. 39.20 லட்சமாகும். அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு உள்பட்டு ஏற்கெனவே 25 சதவீதம் செலுத்திய கடன்தாரா்கள், மீதமுள்ள 75 சதவீதத் தொகையை செலுத்துவதற்கு ஏதுவான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, இதுவரை இத்திட்டத்தில் சேராதவா்கள் உடனடியாக சோ்ந்து ஒரே தவணையில் முழுமையாக சம்பந்தப்பட்ட தொடக்கக் கூட்டுறவு மற்றும் ஊரக வளா்ச்சி வங்கிகளில் தங்களது கடனைத் திருப்பிச் செலுத்தி பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பண பலத்தை பயன்படுத்தி பாஜக வதந்தி பரப்புகிறது: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

வாரணாசியில் பிரதமா் மோடி 14-ஆம் தேதி வேட்புமனு தாக்கல்

அம்மூா் காப்புக் காட்டில் தண்ணீா் தேடி அலையும் விலங்குகள்.. வனத்துறை நடவடிக்கை எடுக்க சமூக ஆா்வலா்கள் கோரிக்கை ...

இந்து மக்கள் கட்சி வேலூா் கோட்ட பொறுப்பாளா்கள் சந்திப்பு

SCROLL FOR NEXT