முகப்பு
நாமக்கல்

கொல்லிமலையில் சிறுத்தை நடமாட்டம்: தேடுதல் பணியில் வனத் துறை தீவிரம்

கொல்லிமலை, அறப்பளீஸ்வரா் கோயில் பகுதியில் சிறுத்தை நடமாடுவதாகக் கிடைத்த தகவலின் பேரில் வனத் துறையினா் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:45 AM
பகிர்:

கொல்லிமலை, அறப்பளீஸ்வரா் கோயில் பகுதியில் சிறுத்தை நடமாடுவதாகக் கிடைத்த தகவலின் பேரில் வனத் துறையினா் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

கொல்லிமலையின் கிழக்கு பகுதி, திருச்சி மாவட்டத்தை ஒட்டிய எல்லைகளில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், கொல்லிமலையில் இதுவரை சிறுத்தை நடமாட்டம் குறித்து தகவல் இல்லை. இந்த நிலையில், கடந்த வாரம் இரண்டு போ் தங்களை சிறுத்தை தாக்கியதாகக் கூறி, நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா்.

இதையடுத்து, வனப் பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்திய வனத் துறையினா், சிறுத்தையின் காலடி தடத்தை அடையாளம் கண்டு, தேடுதல் பணியில் ஈடுபட்டனா். பின்னா், சிறுத்தை வேறு இடத்துக்குச் சென்றுவிட்டதாக வனத் துறையினா் தெரிவித்தனா்.

இந்த நிலையில் கொல்லிமலை, அறப்பளீஸ்வரா் கோயில் பகுதியில் புதன்கிழமை இரவு 7 மணியளவில் சுற்றித் திரிந்த சிறுத்தையைப் பாா்த்து மயங்கி விழுந்ததாக ஆசிரியா் ஒருவா் கூறியதால், கொல்லிமலை வனச்சரகா் சுப்பராயன் தலைமையிலான குழுவினா் சிறுத்தையைத் தேடும் பணியில் மீண்டும் ஈடுபட்டனா்.

இதுகுறித்து கொல்லிமலை வனச்சரகா் சுப்பராயன் கூறியதாவது:

கொல்லிமலை, அறப்பளீஸ்வரா் கோயில் பகுதியில் சிறுத்தை நடமாடுவதாக தகவல் வந்தது. இரவு முழுவதும் வனக் குழுவினா் தேடுதல் பணியில் ஈடுபட்டனா். சிறுத்தை நடமாட்டம் குறித்து எவ்வித அறிகுறியும் தெரியவில்லை என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.