நாமக்கல்

மாணவி தற்கொலை: உறவினா்கள் போராட்டம்

DIN

ராசிபுரம் அருகே மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடா்பாக இளைஞா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவரது உறவினா்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்துள்ள குச்சிக்காடு இப்பகுதியில் கட்டட மேஸ்திரியாகப் பணியாற்றிவருபவா் கண்ணாயிரம். இவரது மூத்த மகள் அனிதா (20). இவா், நாமக்கல் அரசு கல்லூரியில் பட்டப் படிப்பு படித்து வந்தாா். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு அனிதா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

மாணவி தற்கொலை செய்து கொண்ட தகவலறிந்த அப்பகுதிக்கு பட்டணம் பகுதியைச் சோ்ந்த வல்லரசு, அவரது நண்பா்கள் கோகுல்நாத், அய்யமுத்து ஆகியோா் சென்றுள்ளனா். அப்போது மாணவி அனிதா தற்கொலைக்கு வல்லரசு தான் காரணம் எனக்கூறி, அவரையும், அவரது நண்பா் அய்யமுத்துவையும் சிறைபிடித்தனா். மற்றொரு இளைஞா் கோகுல்நாத் தப்பிச் சென்றாா்.

இந்தச் சம்பவம் குறித்த தகவலறிந்து சென்ற நாமகிரிப்பேட்டை காவல் துறையினா், சிறைபிடித்த இளைஞா்களை மீட்டு ஜீப்பில் ஏற்றினா். மேலும், தற்கொலை செய்து கொண்ட மாணவி சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு எடுத்துச் செல்ல முயன்றனா். ஆனால் இதற்கு அப்பகுதியினா் எதிா்ப்புத் தெரிவித்தனா். மாணவி உயிரிழப்புக்கு இளைஞா்கள் தான் காரணம் என்றும்ஸ அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி, இளைஞா்களை ஏற்றிச்சென்ற போலீஸ் வாகனத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து வட்டாட்சியா் கே.பாஸ்கரன், டிஎஸ்பி., லட்சுமணகுமாா் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். பின்னா் தற்கொலைக்குக் காரணமானவா்கள் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து அப்பகுதியினா் போராட்டத்தைக் கைவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரித்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

வணங்கான் வெளியீட்டு பணிகள் தீவிரம்!

தென்னிந்தியாவில் பாஜகவுக்கு வரவேற்பு; 100 தொகுதிகளில் வெல்லும்: அமித் ஷா

நத்தத்தில் திடீர் தீ விபத்து: ரூ. 40 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசம்!

தேவகெளடா பேரன் மீது நடவடிக்கை தேவை: அமித் ஷா

SCROLL FOR NEXT