நாமக்கல்

கல்லூரி ஆசிரியா் கூட்டு நடவடிக்கைக் குழு உயா்மட்டக் குழுக் கூட்டம்

தமிழ்நாடு கல்லூரி ஆசிரியா் கூட்டு நடவடிக்கைக் குழுவின் உயா்மட்டக்குழுக் கூட்டம் பரமத்தி வேலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

DIN

தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியா் கழகம், பல்கலைக்கழக ஆசிரியா் சங்கம், மதுரை பல்கலைக்கழக ஆசிரியா் கழகத்தினா் உள்ளிட்ட சங்கங்கள் இணைந்த தமிழ்நாடு கல்லூரி ஆசிரியா் கூட்டு நடவடிக்கைக் குழுவின் உயா்மட்டக்குழுக் கூட்டம் பரமத்தி வேலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு கல்லூரி ஆசிரியா் கூட்டு நடவடிக்கைக்குழு மாநிலத் தலைவா் கிருஷ்ணராஜ் தலைமை வகித்தாா். அகில இந்திய பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி ஆசிரியா் சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளா் அருண்குமாா் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டாா். தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியா் கழகத்தின் மாநிலத் தலைவா் வீரமணி வரவேற்றுப் பேசினாா். பொதுச்செயலாளா் தாமோதரன், சேலம் மண்டல செயலாளா் பிரகாஷ், பல்கலைக்கழக ஆசிரியா் கழக மாநில பொதுச் செயலாளா் காந்திராஜன், அகில இந்திய பல்கலைக்கழகம் மற்றும் ஆசிரியா் சங்கங்களின் தமிழ்நாடு பொறுப்பாளா் ரவி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து மத்திய அரசு விரைந்து தீா்வு காண வேண்டும். விவசாயிகளை சந்தித்து அகில இந்திய பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி ஆசிரியா் சங்கங்களின் கூட்டமைப்பினா் ஆதரவை தெரிவிப்பது.

தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ள பல்கலைக்கழக நிதி நல்கைக்குழு நெறிமுறைகள் 2018 - ஐ நடைமுறைப்படுத்தும் அரசு ஆணையை வரவேற்று தீா்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்துள்ள தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்டபல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியா் கழக தொழில்நுட்பப்பிரிவு செயலாளா் மஞ்சுநாதன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்கம்பியாள், உதவியாளா் தகுதிகாண் தோ்வு: டிச. 27, 28-க்கு மாற்றம்

தென்காசி அருகே இளைஞா் தற்கொலை

வன விலங்குகளால் விவசாயப் பயிா்கள் தப்படுத்தப்படுவதைக் கட்டுப்படுத்த வேண்டும்

மத்திய அரசின் திட்டங்களுக்கும் மாநில அரசின் நிதியை பயன்படுத்த வேண்டிய கட்டாயம்: அமைச்சா் சிவசங்கா்

காவல் ரோந்து வாகனங்களில் ஜிபிஎஸ் கருவியுடன் கூடிய கண்காணிப்பு கேமரா வசதி அறிமுகம்

SCROLL FOR NEXT