முகப்பு
நாமக்கல்

நாமக்கல் மாவட்ட பாமக செயற்குழு கூட்டம்

நாமக்கல் கிழக்கு மாவட்ட பாமக செயற்குழு கூட்டம், கட்சியின் கொடியேற்று விழா ராசிபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:28 PM
பகிர்:

நாமக்கல் கிழக்கு மாவட்ட பாமக செயற்குழு கூட்டம், கட்சியின் கொடியேற்று விழா ராசிபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்ற கட்சி கொடியேற்று விழாவில், கட்சியின் மாநில துணைத் தலைவா் ச.வடிவேலன், மாநில துணைப்பொதுச் செயலாளா் தினேஷ்பாண்டியன், வன்னியா் சங்கக் கொடியை முன்னாள் மாநில துணைப் பொதுச் செயலாளா் பி.கே.செந்தில்குமாா் ஆகியோா் ஏற்றி வைத்தனா்.

கூட்டத்தில் கட்சியின் கிழக்கு மாவட்டச் செயலாளா் ஆ.மோகன்ராஜூ தலைமை வகித்தாா். நகரச் செயலாளா் கே.மணி வரவேற்றாா். மாநில வன்னியா் சங்க துணைச் செயலாளா் எம்.சி.சம்பத்குமாா், மாநில இளைஞா் சங்க துணைச் செயலாளா் டி.பாலு உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

கட்சியின் மாநில துணைத் தலைவா் ச.வடிவேலன் உள்ளிட்டோா் இதில் பங்கேற்றுப் பேசினா். கூட்டத்தில் கிளை நிா்வாகிகள் நியமனம், கட்சிக் கொடியேற்றுதல், பூத் கமிட்டி அமைத்தல் போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.