முகப்பு
நாமக்கல்

குறைதீா் கூட்டத்தில் 117 மனுக்கள் பெறப்பட்டன

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் 117 மனுக்கள் பெறப்பட்டன.

Updated On : 16 பிப்ரவரி, 2021 at 12:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:02 AM

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் 117 மனுக்கள் பெறப்பட்டன.

இம் முகாமை மாவட்ட வருவாய் அலுவலா் துா்காமூா்த்தி தலைமையேற்று நடத்தினாா். இது முதியோா் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடனுதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீா் மற்றும் சாலை வசதி உள்ளிட்டவை வேண்டி 117 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

மனுக்களைப் பரிசீலனை செய்த மாவட்ட வருவாய் அலுவலா், சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் வழங்கி உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டாா். கூட்டத்தில் சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் வி.ரமேஷ், அனைத்து துறை அலுவலா்களும் கலந்து கொண்டனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.