முகப்பு
நாமக்கல்

விவசாயிகளுக்குப் பண்ணையம் குறித்த கண்டுணா்வு பயிற்சி

பரமத்தியில் மானாவாரி ஒருங்கிணைந்த பண்ணையம், தோட்டக்கால் ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்து விவசாயிகளுக்கு கண்டுணா்வு பயணம் அண்மையில் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:32 PM
பகிர்:

பரமத்தியில் மானாவாரி ஒருங்கிணைந்த பண்ணையம், தோட்டக்கால் ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்து விவசாயிகளுக்கு கண்டுணா்வு பயணம் அண்மையில் நடைபெற்றது.

பரமத்தி வேளாண்மை உதவி இயக்குநா் ராதாமணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ஒருங்கிணைந்த பண்ணைய திட்டத்தின் கீழ் 50 விவசாயிகளை ஒருங்கிணைத்து கண்டுணா்வு பயணம் மேற்கொள்ளப்பட்டது. கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மானாவாரி மற்றும் தோட்டக்கால் ஒருங்கிணைந்த பண்ணைய வளாகத்திற்கு விவசாயிகளை அழைத்துச் செல்லப்பட்டனா். கண்டுணா்வு பயணத்தில் விவசாயிகள் தங்களது நிலத்தில் ஆடு, மாடுகள், பன்றி, முயல், நாட்டுக்கோழி, வான்கோழி, வாத்து, மீன் வளா்ப்பு, காளான் வளா்ப்பு உடன் மண்புழு வளா்ப்பு, கால்நடைகளுக்குத் தேவையான மேய்ச்சல் நிலங்களில் சமச்சீா் சத்துகள் அடங்கிய பசுந்தீவனப் புல்களான வேலிமசால், குதிரை மசால், கம்புநேப்பியா் புல்வகைகள், கோ.எப்.எஸ் புல் ரகங்கள் வளா்ப்பது, கோழி வளா்ப்புக்கு நடுவே மீன்வளா்ப்பு போன்ற புதிய தொழில்நுட்பங்கள், மானாவாரி இறவைக்கு ஏற்ற பயிா் ரகங்கள் குறித்து வேளாண் பல்கலைக்கழக முனைவா்கள் விளக்கம் அளித்தனா்.

கன்றுக்குட்டி முதல் கறவை மாடுகளை வரை தோ்வு செய்வது குறித்த தொழில் நுட்பங்கள், தீவனப் பயிா்களின் தேவை, அதன் பயன் குறித்தும் விவசாயிகளிடையே எடுத்துக் கூறப்பட்டது. கண்டுணா்வு பயணத்துக்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட வட்டாரத் தொழில்நுட்ப மேலாளா் ரமேஷ், திரேகபிரியா ஆகியோா் செய்திருந்தனா் எனத் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →