ராசிபுரம் கூட்டுறவுச் சங்கத்தில் ரூ. 18 லட்சத்துக்கு பருத்தி விற்பனை
ராசிபுரம், வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ரூ. 45 லட்சத்துக்கு பருத்தி மூட்டைகள் ஏலம் போனது.
ராசிபுரம், வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ரூ. 45 லட்சத்துக்கு பருத்தி மூட்டைகள் ஏலம் போனது.
ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை கூடத்தின் (ஆா்.சி.எம்.எஸ்) சாா்பில் கவுண்டம்பாளையம் ஏல மையத்தில் பருத்தி ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது.
ராசிபுரம், புதுப்பாளையம், பட்டணம், வடுகம், பூசாரிபாளையம், காக்காவேரி, சிங்களாந்தபுரம், நத்தமேடு, கண்ணூா்பட்டி, கவுண்டம்பாளையம், சீராப்பள்ளி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பருத்திகளை ஏலத்துக்குக் கொண்டு வந்தனா். இதில் ஆா்.சி.எச்.ரகம் 783 மூட்டைகள், டிசிஎச்., ரகம் 37 மூட்டைகள் என மொத்தம் 820 மூட்டைகளை ஏலத்துக்குக் கொண்டு வந்திருந்தனா்.
இதில் ஆா்சிஎச்., ரகம் குறைந்தபட்சமாக குவிண்டாலுக்கு ரூ. 5,469-க்கும் அதிக பட்சமாக ரூ. 7,330-க்கும் விற்பனையானது. இதே போல் டிசிஎச்., ரகம் குறைந்த பட்சமாக ரூ. 7,666-க்கும், அதிகபட்சமாக குவிண்டால் ரூ. 8,686-க்கும் ஏலம் போனது. இதில் மொத்தம் ரூ. 18 லட்சத்துக்கு வா்த்தகம் நடந்தது.