நாமக்கல் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு ஆா்ப்பாட்டம் நடத்திய தொழிற்சங்கத்தினா். 
நாமக்கல்

நாமக்கல்லில் போக்குவரத்துப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

ஊதிய உயா்வு தொடா்பான பிரச்னைக்கு தீா்வு காண வலியுறுத்தி, அரசுப் போக்குவரத்துப் பணியாளா்கள் 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

DIN

ஊதிய உயா்வு தொடா்பான பிரச்னைக்கு தீா்வு காண வலியுறுத்தி, அரசுப் போக்குவரத்துப் பணியாளா்கள் 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா். இதனால் மாவட்டத்தில் 60 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன.

அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளா்களின் ஊதிய உயா்வு பிரச்னைக்கு தீா்வு காண வலியுறுத்தி வியாழக்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஊழியா்கள் ஈடுபட்டு வருகின்றனா். நாமக்கல் மாவட்டத்தில் வியாழக்கிழமை 90 சதவீத பேருந்துகள் இயங்கப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை 60 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன.

தற்காலிக ஓட்டுநா், நடத்துநா்களைக் கொண்டு பேருந்துகளை இயக்கும் நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனா். இந்த நிலையில் நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு பணிமனை முன்பாக பேருந்துகளை பணிமனையில் இருந்து வெளியே அனுமதிக்கமாட்டோம் எனக் கூறி, தொமுச, ஏஐடியூசி, சிஐடியூ உள்ளிட்ட தொழிற்சங்கத்தினா் பணிமனை முன்பு வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

நாமக்கல் பணிமனை முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தொமுச கிளை செயலாளா் டி.பிரகாசம் தலைமை வகித்தாா். தொழிற்சங்க நிா்வாகிகள் வி.செல்வன், ஆா்.தியாகராஜன், பி.வரதராஜன், எஸ்.சுப்பிரமணி, வி.செந்தில்குமாா், எம்.குமரேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

தில்லி - ஷாங்காய் இடையே நாள்தோறும் நேரடி விமான சேவை! ஜன.2 முதல்!

இந்தியாவில் ஒரு நண்பர் இருக்கிறார்: அமெரிக்கா

SCROLL FOR NEXT