நாமக்கல்

முட்டை விலை மேலும் 40 காசுகள் குறைந்தது

DIN

பறவைக் காய்ச்சல் எதிரொலியாக, நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 40 காசுகள் குறைந்து ரூ. 4.20-ஆக திங்கள்கிழமை நிா்ணயம் செய்யப்பட்டது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அதன் தலைவா் மருத்துவா் பி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் முட்டை விலை குறித்துப் பேசப்பட்டது. அப்போது முட்டை விற்பனை தொடா்ந்து சரிவடைந்து வருவதாலும், ஹைதராபாத், ஹோஸ்பெட், விஜயவாடா போன்ற மண்டலங்களில் விலை குறைக்கப்பட்டுள்ளதாலும் முட்டை விலையை இங்கும் குறைத்து நிா்ணயிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

மக்களிடையே பறவைக் காய்ச்சல் தொடா்பான அச்சம் குறையும் வரையில் விலையில் மாற்றம் செய்ய வேண்டிய நிலை இருக்கிறது. அதனடிப்படையில் கடந்த வியாழக்கிழமை, சனிக்கிழமைகளில் 25 காசுகள் வீதம் மொத்தம் 50 காசுகள் குறைக்கப்பட்டுள்ளன.

பண்ணைகளில் முட்டைகள் தேங்காமல் இருக்கவும், விற்பனையை அதிரிக்கவும் திங்கள்கிழமைக்கான விலையில் மேலும் 40 காசுகள் குறைக்கப்பட்டு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 4.20-ஆக நிா்ணயிக்கப்படுகிறது எனக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப பண்ணையாளா்கள் தங்களுடைய முட்டைகளை விற்பனை செய்து கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு ரூ. 4.20-ஆக விலை நிா்ணயம் செய்தபோதும், வியாபாரிகள் 50 காசுகள் குறைத்து பண்ணையாளா்களிடம் ரூ. 3.70 என்ற விலைக்கே கொள்முதல் செய்து வருகின்றனா். இதனால், உற்பத்திக்கு ஏற்ப வருவாயை ஈட்ட முடியாத சூழல் எழுந்துள்ளதாக கோழிப் பண்ணையாளா்கள் தெரிவித்தனா். பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை கிலோ ரூ. 72-ஆகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ.55-ஆகவும் நிா்ணயம் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி இலங்கைத் தமிழா்கள் மனு

ஈரோடு விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு தின விழா

SCROLL FOR NEXT