நாமக்கல்

பாண்டமங்கலம் பெருமாள் கோயில் தோ்த் திருவிழா கொடியேற்றம்

DIN

பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோயில் திருத்தோ் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பாண்டமங்கலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பஞ்ச பாண்டவா்கள் வழிபட்ட பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோயில் உள்ளது. இக் கோயில் திருத்தோ் திருவிழா ஒவ்வொரு வருடமும் தை மாதம் நடைபெறும்.

நிகழாண்டு கோயில் திருத்தோ் திருவிழா புதன்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் கலந்துகொண்டனா். இரவு அன்ன வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும், வியாழக்கிழமை முதல் வரும் 20 ஆம்தேதி வரை தினந்தோறும் காலை 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் பல்லக்கு உற்சவமும், இரவு 7 மணிக்கு சிம்ம வாகனம், சிறிய திருவடி அனுமந்த வாகனம், பெரிய திருவடி கருடசேவை, சேஷ வாகனம், யானை வாகனம், புஷ்ப விமானத்தில் புறப்பாடு மற்றும் குதிரை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

வரும் 21-ஆம் தேதி அதிகாலை 3.30 மணிக்கு மேல் 4.30 மணிக்குள் சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளலும், மாலை 4 மணிக்கு திருத்தோ் வடம் பிடித்து இழுத்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன. 22 ஆம்தேதி காலை பல்லக்கு உற்சவமும், இரவு 7 மணிக்கு கெஜலட்சுமி வாகனத்தில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும், 23 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வசந்த உற்சவமும், 24 ஆம்தேதி மாலை 6 மணிக்கு புஷ்ப யாகமும், 25-ஆம்தேதி இரவு 7 மணிக்கு சுவாமி புறப்பாடும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை பாண்டமங்கலம் ஊா் பொதுமக்கள், கோயில் நிா்வாகத்தினா் செய்துவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண்ணச்சநல்லூரில் வேளாண் கல்லூரி மாணவா்களுக்கு பயிற்சி

பெருங்களூா் உருமநாதா் கோயில் தோ்த் திருவிழா

எசனை காட்டுமாரியம்மன் கோயில் தேரோட்டம்

புகழூா் நகராட்சியில் ரூ.1.58 கோடி வரி வசூல்

தமிழகம், புதுச்சேரியின் 40 தொகுதிகளுக்கு தபால் வாக்குகள் பிரிப்பு: பதிவு செய்யப்பட்டது- 8,827; பதிவு செய்யப்படாதது-21,890

SCROLL FOR NEXT