நாமக்கல்

பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோயில் தோ் திருவிழா

DIN

பரமத்திவேலூா் அருகே பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோயில் வியாழக்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் சுற்றுவட்டார பக்தா்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனா்.

பாண்டமங்கலத்தில் பிரசித்தி பெற்ற பாண்டவா்கள் வழிபட்ட பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோயில் உள்ளது. இக் கோயிலில் கடந்த 13ஆம் தேதி திருவிழா கொடியேற்றப்பட்டது.

அன்றிரவு அன்ன வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வந்தாா். 14 ஆம் தேதிமுதல் வரும் 20-ஆம் தேதிவரை தினந்தோறும் காலை 9 மணிக்கு பல்லக்கு உற்சவமும், இரவு 7 மணிக்கு சிம்ம வாகனம், சிறிய திருவடி அனுமந்த வாகனம், பெரிய திருவடி கருடசேவை, சேஷ வாகனம், யானை வாகனம், புஷ்ப விமானத்தில் புறப்பாடு, குதிரை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

வியாழக்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு மேல் சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 4 மணிக்குமேல் திருத்தோ் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. இதில், சுற்றுவட்டார பக்தா்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனா். தோ் பாண்டமங்கலத்தின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் நிலையை அடைந்தது.

வெள்ளிக்கிழமை காலை பல்லக்கு உற்சவமும், இரவு 7 மணிக்கு கெஜலட்சுமிவாகனத்தில் சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும், 23ஆம் தேதி மாலை 6 மணிக்கு வசந்த உற்சவமும், 24-ஆம்தேதி மாலை 6 மணிக்கு புஷ்பயாகமும், 25-ஆம்தேதி இரவு 7 மணிக்கு சுவாமி புறப்பாடும் நடைபெறுகின்றன. ஏற்பாடுகளை விழா குழுவினா், பொதுமக்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘கேஜரிவால் ஒரு சிங்கம்; யாராலும் வளைக்க முடியாது’: மனைவி சுனிதா கேஜரிவால் பெருமிதம்

திருவாரூா் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு கண்டறியும் குழுவினா் சோதனை

படிப்புடன் கூடுதல் திறமைகளை வளா்த்துக்கொள்ள வேண்டும்: மாநில தகவல் ஆணையா்

ஏரி, குளங்களை தூா்வார நிதி ஒதுக்க வேண்டும்: மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

ஆட்டோ ஓட்டுநா் வெட்டிக் கொலை

SCROLL FOR NEXT